RECENT NEWS

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தங்க மோதிரம் அணிவிப்பு
19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முதலமைச்சர்

19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முதலமைச்சர்

Jan 12, 2021

28719

வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா பேரிடர் காரணமாக சுமார் 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கேட்கப்பட்டதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் பொதுத்தேர்வு கிடையாது - சிபிஎஸ்இ நிர்வாகம்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் பொதுத்தேர்வு கிடையாது - சிபிஎஸ்இ நிர்வாகம்

Dec 03, 2020

2339

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், எழுத்துப்பூர்வமாக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தேர்வு தேதிகள் தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும், பொதுத்தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும், சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு அறிவிப்பு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு அறிவிப்பு

May 08, 2020

18779

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள பாடங்களுக்கான தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை நடத்தப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியதும், முன்னெச்சரிக்கையாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஏற்கெனவே நடந்து வந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அப்போது சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதனால் 29 மெயின் பாடங்களுக்கான தேர்வுகள் எப்போது நடத்தப்படுமென கேள்வியெழுந்தது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், எஞ்சியுள்ள சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புகளுக்கான பாடத் தேர்வுகள், ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

#WATCH CBSE will conduct pending class 10th and 12th board exams from July 1st to July 15th: Union HRD Minister Ramesh Pokhriyal pic.twitter.com/JTW2067cvQ
— ANI (@ANI) May 8, 2020

BIG STORIES

எல்லாரும் ஏஞ்சல் ஆயிற முடியுமாடா..? பைக்கில் கெத்து காட்டிய பொண்ணுங்க.. பைக்கை பறிகொடுத்த வேட்டி பாய்ஸ்..! அபராதமாக பழுத்தது ரூ 1,40,000

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News